search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமி தரிசனம்"

    • பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு.
    • ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்து.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இதற்கிடையே, விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

    இந்நிலையில், அசாமில் நல்பாரி பேரணியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தனது டேப் (TAB) மூலம் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வை கண்டுகளித்தார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " எனது நல்பாரி பேரணிக்குப் பிறகு, ராம் லல்லாவில் சூர்ய திலகத்தைப் பார்த்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.

    அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும்.

    மேலும், இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
    • ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

    மதுரை:

    தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் இரவு அழகர்கோவில் சாலையில் உள்ள தங்குவிடுதியில் தங்கினார்.

    இதனையடுத்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற பின்னா் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார்.

    பின்னர் மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார். பின்னர் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்

    முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர் தங்கிய தங்கு விடுதியில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப் பட்டதோடு, கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

    மீனாட்சியம்மன் கோவிலில் 30 நிமிட சாமி தரிசனம் முடித்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுசென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக அசாம் புறப்பட்டுசென்றார்.

    முன்னதாக காலையில் ராஜ்நாத் சிங் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • கடந்த மார்ச் 26ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் திருக்கோவில் அமைந்து ள்ளது. இந்த நிலையில் சிறிய அளவில் இருந்த கோவில் காரணம்பேட்டை ஆன்மீகப் பெரியோர்களால் சீரமைக்கப்பட்டு, சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் 26ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் காரணம்பேட்டை சின்னச்சாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காலை கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடத்தப்பட்டு குதிரை, பசு கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை சரவணா தியேட்டர் எதிரில் உள்ள முனியப்பன், கருப்பண்ண சுவாமி கோவிலில் குதிரை, பசு கண் திறப்பு விழா நடைபெற்றது. காலை கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடத்தப்பட்டு குதிரை, பசு கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

    யாகசாலை பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார், சத்யோஜாத வேத சங்கர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர்கள் நடத்தினர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×